தெலுங்கு படங்களில் நமக்கு தெரிந்த ஒரு ஹீரோயின் இருந்தாலே அதை உடனே தமிழில் டப்பிங் பண்ணுவதற்கு டோக்கன் அட்வான்ஸ் போட்டு விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மூன்று ஹீரோயின்கள் ஒரே படத்தில் இருந்தால் அந்தப்படத்தை சும்மா விட்டு வைப்பார்களா என்ன..?
போதாதற்கு பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், ஜெயப்பிரகாஷ் என ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர்களும் இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான ‘பழுப்பு’ படத்தை ‘எவன்டா’ என்கிற வழக்கமான டப்பிங் பட பாணியில் பெயர் வைத்து விரைவில் வெளியிட உள்ளார்கள்.. படத்தின் கதாநாயகன் ரவிதேஜாவை இங்கே பலருக்கு தெரியாது என்றாலும் இந்தப்படத்தின் மூலம் அவரது பராக்கிரமங்களை தமிழ் ரசிகர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி தரும் என்பது உண்மை.