ரஞ்சித் மனதை விட்டு இன்னும் நீங்காத ‘காளி’..!

கார்த்தியை வைத்து ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்திற்கு முதலில் ‘காளி’ என்றுதான் டைட்டில் வைத்தார்கள்.. அல்லது வைப்பதாக இருந்து.. இல்லையில்லை வைப்பதாக சொல்லப்பட்டது. காரணம் ‘காளி’ ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படம்.. கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயரும் ‘காளி’ தான். ஆனால் அதன் பின் டைட்டில் ‘மெட்ராஸ்’ ஆக மாறிப்போனது.

இபோது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை தான். ஆனால் இந்தப்படம் பற்றி இயக்குனர் ரஞ்சித், ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும்போது மீண்டும் முள்ளும் மலரும் ‘காளி’ போன்ற ரஜினியை எனது படத்தில் பார்க்கலாம் என கூறியுள்ளார். ஆக ‘காளி’ என்கிற பெயர் ரஞ்சித் மனதில்நீன்காத இடத்தை பிடித்துவிட்டது.

கார்த்திகாளிமெட்ராஸ்ரஜினிரஞ்சித்