பாகுபலி முதல் பாகம் வெளியானதில் இருந்தே மலையாள திரையுலகில் இருந்து அழைப்பு வந்தாலும் நீண்ட நாட்களாக பிடிகொடுக்காமல் இருந்த ராணா, சமீபத்தில் தான் முதன்முறையாக ‘அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா’ என்கிற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
திருவாங்கூர் அரசர்களான மார்த்தாண்ட வர்மா மற்றும் கார்த்திகா வர்மா பற்றிய வரலாற்றுக்கதையாக உருவாகும் இந்தப்படத்தில் மார்த்தாண்ட வர்மாவாக நடிக்க இருக்கிறார் ராணா. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்குகிறார்.
இதனையொட்டி கடந்த ஞாயிறு அன்று திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த ராணா, பத்மநாப சுவாமி கோவிலில் வழிபட்டதுடன், திருவனந்தபுரம் அரண்மனைக்கு சென்று ராஜவம்சத்தினரிடம் ஆசியும் பெற்றார். அதை தொடர்ந்து இந்தப்படம் படமாக்கப்படவுள்ள லொக்கேசன்களையும் பார்வையிட்டார் ராணா.