பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்

பாபி சிம்ஹா தற்போது நடித்துவரும் படம் ‘அக்னி தேவ்’. இந்தப்படத்தை சென்னையில் ஒரு நாள்- 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இப்படத்தின் இரண்டாவது நாயகனாக சதீஷ் நடிக்கிறார். தற்போது இதன் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். செனட்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றுதான் இந்த ‘அக்னி தேவ் படமாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி தேவ்சதீஷ்சாம் சூர்யாசெனட்டோ ஸ்டூடியோசென்னையில் ஒரு நாள் 2ஜான் பால்ராஜ்ஜெய் பிலிம்ஸ்பாபிசிம்ஹாரம்யா நம்பீசன்ராஜேஷ்குமார்