ராஜமாதாவாக மாறிய ‘நீலாம்பரி’

நான் ஈ படத்தின் மூலமா தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதுவரை டைரக்ட் செய்த அத்தனை படங்களையும் சூப்பர்ஹிட் ஆக்கிய ராஜமவுலி இப்போது தெலுங்கில் டைரக்ட் செய்து வரும் படம் பாஹூபாலி. இது ஒரு வரலாற்றுப் படம். பிரபாஸ், ராணா, அனுஷ்கா என முன்னணி நடிகர்கள் நடிக்கிறாங்க.

ஆந்திராவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டுகளில் இந்தப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நம்ம ரம்யாகிருஷ்ணன் ராஜமாதா கேரக்டரில் நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வாய்ப்பபை வாங்கிக் கொடுத்தது படையப்பா படத்தில் ஏற்று நடித்த நீலாம்பரி கேரக்டர் என்கிறார்கள்.

இந்தப்படத்தில் வரும் ராஜமாதா கேரக்டர் மிகவும் முக்கியமானது. அதாவது மொத்த கதையையும் நகர்த்தி செல்லும் கேரக்டர் என்றாலும் கொஞ்சம் வில்லித்தனமான கேரக்டராம். இதில் நடிக்க பல நடிகைளை தேர்வு செய்து நடிக்க வைத்துப் பார்த்த ராஜமவுலிக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ஏதேச்சையாக படையப்பா படத்தை ராஜமவுலிக்கு அதில் நீலாம்பரியாக நடித்த ரம்யாவின் நடிப்பு பிடித்துப்போக இப்போது அந்த கேரக்டருக்கு அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்காக ரம்யா கிருஷ்ணனுக்கு ராஜ உடைகள் எல்லாம் அணிவித்து போட்டோ ஷூட்டும் நடத்தியிருக்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்
Comments (0)
Add Comment