ராம்கி பட தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்த ஆரி..!

ராம்கி தற்போது நடித்து விரைவில் ரிலீசாக இருக்கிறது. ‘இங்கிலிஷ் படம்’. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நெடுஞ்சாலை ஆரி நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை என தனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து ‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தார் ஆரி. இது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆரி, “’இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை. இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன். நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார் ஆரி.

AariEnglish PadamRamkiஆரிஇங்கிலீஷ் படம்