இன்று சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி-தமன்னா நடித்துள்ள ‘தர்மதுரை’ படம் வெளியாகியுள்ளது.. நேற்று முன்தினம் இந்தப்படம் பிரத்யேகமான சிறப்பு காட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், மற்றும் அன்பு மணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு திரையிட்டு காட்டப்பட்டது..
அன்புமணி ராமதாஸ் எப்போதுமே வலியுறுத்திவந்த, “டாக்டருக்கு படிப்பவர்கள் ஒரு வருடமாவது கிராமங்களில் கட்டாயம் பணி செய்யவேண்டும்’ என்கிற கருத்தை இந்தப்படம் வலியுறுத்துவதாக அமைந்திருந்ததால் தான் இந்தப்படத்தை ராமதாஸ் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தை பார்த்துவிட்டு இந்த தலைவர்கள் படத்தையும் அதில் நடித்துள்ள நட்சத்திரங்களையும் படத்தை இயக்கிய சீனு ராமசாமியையும் மனதாரா பாராட்டியுள்ளார்கள்..