மகேஷ்பாபு நடிக்கும் படங்களைக்கூட பெட்டியில் வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள்.. ரீமேக் ரைட்ஸை விஜயோ மற்ற யாரோ வாங்கினாலும் வாங்கலாம் என்று.. ஆனால் ராம்சரணின் படங்கள் அங்கே ஹிட்டானால் போதும், அப்படியே டப்பிங் செய்து தமிழுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘மாவீரன்’, ‘நாயக்’, ஆகியவை இதற்கு சாம்பிள்கள்..
அந்த வரிசையில் கடந்தவருடம் தெலுங்கில் ராம்சரண் நடித்த ‘கோவிந்துடு அந்தரிவாடு’ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘ராம்லீலா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ராம்சரணுடன் மூன்றாவது முறை கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் எனக்கு தமிழுக்கு நன்கு தெரிந்த முகங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். பரிதி எழுதியுள்ள பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் பிரபல இயக்குனரும், ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணவம்சி தான்.
அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை, பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவுச்சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான். இந்த குடும்பக்கதையைத்தான் நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.