இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களம் இறங்குவது ஒன்றும் புதிதல்ல.. அந்த பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது.. 1991ல் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் – மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது.
தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து, நடிகர் ராஜ்கிரண் கூறும்போது, “இன்று என் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் 2௦வது பிறந்த நாள். “என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்… அவரே படத்தை இயக்கவும் உள்ளார்” என கூறியுள்ளார்.
ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோரின் திரையுலக பயணத்திற்கு அடித்தளம் போட்டுக்கொடுத்த படம் தான் ‘என் ராசாவின் மனசிலே’. குறிப்பாக அதுவரை ஒரு திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரணை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது இந்தப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.