ஷங்கர் டைரக்சனில் ரஜினி – அக்சய் குமார் இணையும் ‘2.0’..!


ஆரம்பிப்பார்களா மாட்டார்களா, இல்லை ஆரம்பித்துவிட்டார்களா என பல்வேறு யூக செய்திகளுடன் எந்திரன் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கடந்த ஒருமாதமாகவே சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கும் ‘2.0’ படத்தின் துவக்கவிழாவை எளிமையாக நடத்தியுள்ளார் ஷங்கர்..

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழில் காலடி எடுத்து வைக்கிறார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார். தமிழுக்கு வரும் அவருக்கு இதைவிட ராஜகம்பள வரவேற்பு வேறு ஏதும் உண்டா என்ன.?

இந்தப்படத்தின் படப்பிடிப்பையும் நேற்று ஆரம்பித்தனர். இந்த துவக்கவிழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ் கரன், இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குனர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இந்தப்படத்திற்காக முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயக்குனர் ஷங்கருடன் இணைகிறார்.

2.0Akshay KumarEmiLycaRajiniShankar