‘2.O’ படப்பிடிப்பை முடித்தார் சூப்பர்ஸ்டார்…!

ஷங்கர் டைரக்சனில் லைக்கா நிறுவனம் தயரிப்பில் ரஜினி நடித்துள்ள 2.O’ படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் ஆரம்பித்த பின்னார்தான் ரஜினியின் கபாலி ஆரம்பிக்கப்பட்டு ரிலீசாகி, தற்போது அவரது இன்னொரு படமான ‘காலா’ படமும் துவங்கப்பட்டு அதுவும் கூட நிறைவுப்பகுதியை எட்டியுள்ளது.

இந்த நிலையில் மிக நீண்டதொரு பயணமான ‘2.O’ படப்பிடிப்பை நேற்றுடன் சூப்பர்ஸ்டார் ரஜினி வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜனவரி-26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

2 point OAkshaykumarRajinikanthShankarஅக்‌ஷய்குமார்ரஜினிகாந்த்ஷங்கர்