காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏஅசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நேற்று சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ’’வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.