“காலா படம் ஓடுவதற்கு நான் எந்த ஸ்டன்ட்டும் பண்ண தேவையில்லை” ; ரஜினி

காலா திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், தனுஷ், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காலா திரைப்படத்தை இருமுறை பார்த்ததாகவும், சமூக பிரச்சனையை கமர்சியல் திரைப்படம் மூலம் பக்குவமாக சொல்ல கூடிய திறமையான இயக்குனர் பா.ரஞ்சித் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். காலா படத்தை ஓடவைப்பதற்காகத்தான் தூத்துக்குடி சென் றீர்கள் என்றும் அங்கே பேசியது கூட படத்தை ஓடவைக்க நீங்கள் செய்யும் ஸ்டண்ட் தான் என்றும் பலரும் விமர்சிக்கிறார்களே என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினி “ஸ்டண்ட் பண்ணித்தான் என் படத்தை ஓட வைக்கணுமா..? அதுவும் இந்த வயசுல..?.. சினிமாவுக்கு வந்து இந்த 43 வருடங்களில் ஆண்டவன் புண்ணியத்துல, ரசிகர்கள் மற்றும் மக்களோட ஆதரவால எனக்கு இன்னும் அந்த நிலை வரல.. படம் நல்லா இருந்தா ஜனங்க ஏத்துக்குவாங்க.” என பதில் கூறியுள்ளார்.

KaalaRajinikanthRanjithகாலாரஜினிகாந்த்ரஞ்சித்