தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிபவர் ரவீணா ரவி.. தற்போது விதார்த்துக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.. சமீபத்தில் இவர் ரஜினியை சந்தித்து வந்தது பற்றி ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட, சமூக வலைதளங்களில் ஒரே நாளில் பாப்புலராகிப்போனார். ஆமாம்.. இவர் ரஜினியை சந்தித்து எதனால்..?
துபாயில் இருக்கும் இவரது மாமா, ரஜினியை எப்படியாவது பார்க்கவேண்டும் என இவரிடம் அவ்வப்போது சொல்லிவந்தாராம்.. ரவீணாவும் தனக்கு தெரிந்த, அதேசமயம் ரஜினிக்கு வேண்டியவரான வினோத் என்பவரின் காதில் இந்த விஷயத்தை போட்டு வைத்தாராம். அதுபற்றிய நம்பிக்கையே இல்லாமல் இருந்தவருக்கு, திடீரென ஒருநாள் ரஜினியை பார்க்க கிளம்பிவரும்படி தகவல் அளிக்கப்பட இன்ப அதிர்ச்சியில் ஷாக்காகி போனாராம் ரவீணா.
ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய ரவீணாவுக்கு, ரசிகர்கள் ஏன் ரஜினியை சூப்பர்ஸ்டாராக கொண்டாடுகிறார்கள் என்பது அவரது பண்பான நடவடிக்கைகளிலும் பேச்சிலுமே புரிந்ததாம். ரவீணாவின் பாட்டியும் பல வருடங்களுக்கு முன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தவர் தானாம். அப்போது இவர் சிறு குழந்தையாக இருந்த சமயத்திலேயே ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எல்லாம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை ரஜினியிடம் காட்ட, அவரும் அதை நினைவு கூர்ந்து சந்தோஷப்பட்டாராம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.O’ படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிகிறாராம் ரவீணா.. ஷங்கர் பட விஷயம் எல்லாம் ரொம்பவே சீக்ரெட் ஆச்சே.. அதனால் “உங்கள் படத்தில் வேலை பார்க்கிறேன் என நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளலாமா” என தயக்கத்துடன் ரஜினியிடம் கேட்க, அவரோ வழக்கமான புன்னகையுடன், “சொல்லிக்கோ.. சொல்லிக்கோ” என டபுள் பெர்மிஷன் கொடுத்துவிட்டாராம்.