ரஜினிகாந்த்தை கவர்ந்த முனீஷ்காந்த்..!


அவ்வப்போது வெளியாகும் சில நல்ல படங்களை சூப்பர்ஸ்டாருக்கு சிறப்புக்காட்சியாக போட்டுக் காட்டுவார்கள். சில படங்களை சூப்பர்ஸ்டாரே விரும்பிப்போய் பார்ப்பார். இந்த நிகழ்வு படம் வெளியான ஒரு வாரம் கழிந்தபின்னர் தான் நடப்பது வழக்கம்.
ஆனால் ஒரு சின்ன பட்ஜெட் படம் வெளியான மூன்றாம் நாளே ரஜினியை படம் பார்க்க அழைத்து வந்திருக்கிறது என்றால் அது வெள்ளியன்று வெளியான ‘முண்டாசுப்பட்டி’யாகத்தான் இருக்கும். படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்துவிட்டு வந்த ரஜினி, படத்தில் நடித்த விஷ்ணு நந்திதா இருவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் மற்றும் இயக்குனர் ராம்குமார் உட்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
குறிப்பாக இந்தப்படத்தில் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஊருக்குள் அதகளம் பண்ணும் முனீஷ்காந்த் கேரக்டரில் நடித்திருந்த ராம்தாஸின் நடிப்பையும், விஷ்ணுவின் நண்பனாக படம் முழுவதும் வலம் வந்து ‘மைண்ட் வாய்ஸ்’ காமெடி பண்ணியிருக்கும் காளி வெங்கட்டின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினாராம் சூப்பர்ஸ்டார்.

Actor KaaliActor RamdossC V KumarMundasupattiNandithaRajinikanthSean RoldanThirukumaran EntertainmentVishnu Vishalகாளிமுனீஷ்காந்த்ரஜினிகாந்த்