ஆவணப்படம் இயக்கும் ஐஸ்வர்யா ; வாய்ஸ் கொடுக்கும் ரஜினி..!

தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ என இரண்டு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், மூன்றாவது அதிரடியாக ஒரு படத்தி இயக்குவார் என எதிர்பார்த்த வேளையில், ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படம் இயக்கப்போவதாக ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளார். இது சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படமாக இருக்குமாம்..

பொதுமக்களுக்கு அதிகம் தெரியாத, புகழ் வெளிச்சத்துக்கு வராத ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்தப் படம் இருக்கும் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயமே இந்தப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப்படத்துக்கான பின்னணி குரலை தரவுள்ளார் என்பதும் தான்..

3A R RahmanAishwaryaCinema VeeranRajiniVai Raja Vai