ஜி.எஸ்..டி வரி விதிக்கப்பட்ட பின்னும் கூடுதலாக 30 சதவீதம் நகராட்சி வரியை தமிழக அரசு விதித்துள்ளதால் தியேட்டர் கட்டணம் வெகுவாக உயரும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவைப்போல தமிழ்நாட்டிலும் இந்த வரியை நீக்கி உத்திரவிட வேண்டும் என்கிற கோரிக்கை திரையுலகில் வலுத்து வருகிறது. மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக திரையரங்குகளும் கடந்த திங்கள் முதல் மூடப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதை எதிர்த்து குரல் கொடுத்தார் கமல். தற்போதும் கூட தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பேசியுள்ளார் கமல்.. சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த நிலையில் தற்போது தமிழக அரசிடம் கேளிக்கை வரி விதிப்பை நீக்க ஆவன செய்யுமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார் ரஜினி. இதற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.