‘கபாலி’ படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்து வந்த சில நாட்களிலேயே இயக்குனர் பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகின.. கொஞ்ச நாட்கள் கழித்து ரஜினியின் மருமகன் தனுஷ் அந்தப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு செய்து இந்த கூட்டணியை உறுதி செய்தார்..
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் படத்திற்கு ‘காலா’ என பெயர் வைத்துள்ளார்கள்.. அதாவது கரிகாலன் என்பதன் சுருக்கம் தான் இந்த ‘காலா’. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்களை மற்றவர்கள் போல சுத்தலில் விடாமல் ஷூட்டிங் தொடங்கும் முன்பே டைட்டிலை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் விதவிதமான பர்ஸ்ட்லுக் போஸ்டர்களையும் வெளியிட்டு அசத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.