“நேரம் வரும்போது போர்க்களத்தில் இறங்குவோம்” ; தலைவர் அதிரடி..!

சூப்பர்ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவது அவருக்கு கசக்கிறதோ இல்லையோ, அவர் அரசியல் பற்றி பேசினாலே இங்குள்ள பல கட்சிகளுக்கு வயிற்றில் புலியை கரைக்கிறது. உடனே பலரும் அவர் கூறிய கருத்துக்களை விமர்சனம் என்கிற பெயரில் தங்களது வெறுப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல வதந்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தது, எனவே, நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று அதை தெளிவுப்படுத்தும் வகையில் சூப்பர்ஸ்டார் அவர்கள் மேடையில் பேசினார்.

“இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது, பழகினது இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்த தெரிவிச்சிக்கிறேன். இந்த ஒழுக்கம் தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்ல சொன்ன எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்த நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைபிடிக்க வேண்டும்.

முதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு நான் அரசியலுக்குள் வந்தால் எப்படி இருக்கனும் என சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையா வாதப்பொருளா இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்பு தான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம், ஆனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போயிட்டாங்க. அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தா கூட நீங்க என்ன ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். எங்க மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க, அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

நீங்க என்னை தூக்கிப்போட்ட நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல.

சரி அதுக்கு நீ என்ன சரிசெய்வது அப்படீன்னு சொன்னா. ஆமாம் இருக்காங்க, தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி, அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலீத் மக்களுக்காக உழைக்கிறார். சீமான், போராளி அவர் கருத்துக்களை கேட்டு பிரம்மிச்சு போயிருக்கேன் அது போல இன்னும் இருக்காங்க சில தேசிய கட்சிகள்.

ஆனால் அமைப்பு கெட்டு போயிருக்கே. அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியை, சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்.

“என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சியடைய முடியும்”. நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாம் செடி வளர தேவையான உரம் மாதிரி, அவர்கள் நம் வளர்ச்சிக்கே உதவுகிறார்கள்.

பழைய காலத்தில ராஜக்கள் கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது, ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரை அவர்கள் தன் கடைகளை செயவார்கள். அது போல நாம் அனைவரும் அவரவர் கடமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம் என்று கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த் கடையில் முத்தாய்ப்பாக “நேரம் வரும் போது போர்களத்தில் இறங்குவோம்”, என்று கூறினார் பாருங்கள்..

சும்மா அதிருதுல்ல…

PoliticalRajiniRajini Fansஅரசியல்ரசிகர்கள்ரஜினி