சென்னையில் வெள்ளம் வடிந்துவிட்டாலும் மழைபோல தேங்கி கிடக்கும் குப்பைகளும் கழிவுகளும் மக்களுக்கு இன்னொரு விதமான அச்சுறுத்தல் தான். அதனால் குப்பைகளை அகற்றும் பணியில் சென்னையில் உள்ள பணியாளர்களும் தன்னார்வலர்களும் இணைந்து விரைவாக பணியாற்றி வருகின்றனர்.
இருந்தாலும் கூடுதல் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்பதால் மேலும் திருப்பூர், நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து துப்புரவு பணியாளர்களை தமிழக அரசு வரவழைத்துள்ளது… அவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துவருகின்றனர்..
இந்த 11 மாவட்ட துப்புரவு பணியாளர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகளையும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செய்துகொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னைக்கு செல்கிறோமே என்கிற மலைப்புடன் வந்த தொழிலாளர்களுக்கு தங்களுக்காக ரஜினியே தனது மண்டபத்தை ஒதுக்கி, உணவும் அளிப்பதால் உற்சாகமாக வேலைபார்த்து வருகிறார்கள்.