2000ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு, சரியாக 16 வருடங்கள் கழித்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை இன்று வழங்கி மீண்டும் கௌரவப்படுத்தி உள்ளது. இன்று காலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த விருதை சூப்பர்ஸ்டார் பெற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு துறையிலும் மிக உயர்ந்த சாதனைகளை செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.. இந்த வருடம் விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேர்களில் 56 பேர்களுக்கு ஏற்கனவே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. இன்று விருது பெற்ற அடுத்த 56 பேர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.