நதிநீர் இணைப்புக்காக முன்பே ஒரு கோடி டெபாசிட் செய்த ரஜினி..!

சில வருடங்களுக்கு முன் திரையுலகத்தை சேர்ந்த அனைவரும் கர்நாடாகவுடானான தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்க, நெய்வேலியில் இருந்து கர்நாடாக செல்லும் மின்சாரத்தை நிறுத்தப்போவதாக கூறி போராட்டத்தில் இறங்கினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லாத ரஜினி, கர்நாடாகவை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அதற்கு மறுநாளே தனியாக ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

உண்ணாவிரதம் இருப்பது ரஜினியாச்சே.. அதனால் அவரை தனியாக விட்டுவிடுவிட முடியுமா..? அதனால் மொத்த திரையுலகமும் அந்த உண்ணாவிரதத்திலும் கலந்துகொண்டு ரஜினிக்கு ஆதரவு அளித்தது. இந்த உண்ணாவிரதத்தை முடித்த ரஜினி, நதிகளை இணைத்து தேசியமாக்கும் முயற்சியை ஆரம்பித்தால் அதற்காக தான் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அங்கேயே அறிவித்தார்.

அவர் அறிவித்து வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையிலும் கூட, அரசாங்கத்தால் நதிநீர் இணைப்பிற்கான எந்த செயல்பாடுகளும் ஆரம்பிக்கப்படவில்லை.. இப்போதும் கூட அப்படி தகவல் எதுவும் இல்லைதான். ஆனால் தென் மாநில நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் சில வேலைவெட்டியற்ற கூட்டம் ஒன்று, ரஜினி தான் அறிவித்தபடி ஒரு கோடி ரூபாயை சில நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் தாங்கள் ரஜினி வீட்டுமுன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்து.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பலரது கண்டனத்துக்கும் அந்த சங்கம் ஆளானது.. அதேசமயம் சமீபத்தில் தஞ்சாவூர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த ரஜினியின் சகோதரர் இதுபற்றி பேசியபோது, ரஜினி கொடுப்பதாக அறிவித்த ஒரு கோடி ரூபாய் ஏற்கனவே தேசிய வாங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார். அதுமட்டுமல்ல, மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கும்போது அந்தப்பணம் அந்த திட்டத்திற்கு அப்படியே வழங்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் ரஜினியின் நேர்மையை உரசிப்பார்க்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு விட்டதாக ரஜினி ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Rajiniநதி இணைப்புரஜினிவிவசாயிகள்