கலைப்புலி தாணுவுக்கு வரம் தந்த ரஜினி..!

நாம் ஏற்கனவே சொன்ன செய்தி இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. சூப்பர்ஸ்டாரை வைத்து தாணு படம் தயாரிக்கிறார். அந்தப்படத்தை அட்டகத்தி ரஞ்சித் இயக்குகிறார். தாணுவை பொறுத்தவரை இது கிட்டத்தட்ட 35 வருட தவம் என்றே சொல்லலாம்.

என்னதான் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் இன்னு ரஜினியை வைத்து ஒரு படத்தை கூட தயாரிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் கடந்த 35 வருடங்களாகவே தாணுவுக்கு மனக்குறையாக இருந்துவந்தது. அது இப்போது தீர்ந்துள்ளது.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

‘அட்டகத்தி’ ரஞ்சித்சந்தோஷ் நாராயணன்தாணுரஜினி