கண்ணீர் விட்டழுத ரசிகை ; காரை நிறுத்திய ரஜினி..!


மலேசியாவில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் ரஜினியை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் படப்படிப்பு தளத்தை முற்றுகையிட்டு வருகின்றது.. ரஜினியை சந்திக்கும் ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை உடனுக்குடன் ரஜினி ரசிகர்களுக்கென்றே இயங்கிவரும் இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இன்று மாலை இதேபோல படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் ஏறிய ரஜினி மெதுவாக நகரும் காரில் இருந்தபடி ரசிகர்களை பார்த்து கைகாட்டியபடியே கிளம்பினார்.. கார் வேகம் எடுக்க ஆரம்பிக்க, ரசிகை ஒருவர் ரஜினியிடம் நெருங்கி நின்று போட்டோ எடுக்க முயற்சி செய்து முடியாமல் போனதால் கதறி அழ ஆரம்பித்தார். இதை கண்ணாடியில் பார்த்துவிட்டார் ரஜினி.

உடனே காரை நிறுத்த சொன்ன ரஜினி அந்த ரசிகையை அருகில் அழைத்து, “அழாதேம்மா.. என்னை எந்தவிதமாக போஸ் கொடுக்க சொல்லி நீ விரும்புறியோ அப்படியே என் கூட சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்” என கூற அந்த ரசிகையின் கண்களில் வழிந்த நீர் ஆனந்த கண்ணீராக மாறியது.. ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ரசிகை இன்னும் நான்கு நாட்களுக்கு தூங்கமாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

KabaliKalaipuli DhanuRajniRanjith