மலேசிய பாராளுமன்றத்தில் ரஜினி டயலாக் பேசிய எம்பி..!

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மலேசியாவில் நடந்து வரும் ‘கபாலி’ படத்தின் ஷூட்டிங், மலேசியாவின் திருவிழாகவே ஆனது.. மலேசியாவில் உள்ள சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ரஜினியை போட்டிபோட்டு சந்தித்தனர். ரஜினியும் சளைக்காமல் அவர்களை சந்தித்து சந்தோஷப்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் மலேசிய பாராளுமன்றத்தில் பேசிய எம்.பி. ஒருவர் ரஜினியின் புகழ்பெற்ற பன்ச் டயலாக்கான ‘என் வழி தனி வழி.. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி” என்கிற வசனங்களை தமிழில் பேசியதோடு ரஜினி செய்வதைப்போல ஸ்டைலாக தனது கோட்டையும் இழுத்துவிட்டுள்ளார். இந்தக்காட்சி மலேசிய சேனலிலும் ஒளிபரப்பாகி இப்போது வைரலாகி உள்ளது.

KabaliMalaysiaMalaysia M PRajini