ஒரே நேரத்தில் இரட்டைப்பிரசவம் என்பது போல ரஜினி, விஜய் இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து படத்தயாரிப்பில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என நிரூபித்துள்ளார் கலைப்புலி தாணு. அதில் வெற்றிகரமாக விஜய்யின் ‘தெறி’ படத்தை ரிலீஸ் செய்துவிட்டவர், அடுத்ததாக ரஜினியின் ‘கபாலி’ படத்தை ரிலீஸ் செய்யும் தீவிர பணிகளில் இருக்கிறார்..
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு படங்களும் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில், ரஜினியை சந்திக்கப்போனால் தாணுவிடம் ரஜினி தவறாமல் விசாரிப்பது விஜய் படம் எப்படி வந்திருக்கு.. எந்த பொசிசனில் இருக்கு என்பதைத்தானாம்.
அதேபோல தெறி’ படப்பிடிப்பில் இருக்கும் விஜய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் “ரஜினி சாரை வச்சு மாஸா படம் பண்றீங்க.. தலைவர் எப்டி இருக்கார்.. கபாலிக்காக வெயிட்டிங்” என்றுதான் பேசுவாராம். அந்தளவுக்கு தான் தீவிர ரஜினி ரசிகர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டே இருப்பாராம். இது தாணுவே மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்ட தகவலாம்.