முருகதாஸுக்கு வேணா 41 வயசு இருக்குமோ, என்னமோ ஆனா ரஜினிக்கு 42ன்னா இதுலாம் ரொம்பவே ஓவர்.. சும்மா பில்டப்புக்காகவே எதுனா ஒரு டைட்டிலை போட்டு ரவுசு பண்றதே வேலையா போச்சுன்னு நினைக்காதீங்க.. உண்மையிலேயே அந்த அளவுக்கு விஷயம் இருக்குங்க..
சூப்பர்ஸ்டாரோட ‘கோச்சடையான்’ ரிலீஸானப்ப மூணு நாள்ல 42கோடி ரூபாய் வசூலிச்சு மிகப்பெரிய சாதனை பண்ணுச்சுல்ல.. அதே மாதிரி கடந்த வெள்ளிக்கிழமை பாலிவுட்ல ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷன்ல ரிலீஸான ‘துப்பாக்கி’ ரீமேக்கான ‘ஹாலிடே’ படம் மூணு நாள்ல 41 கோடி ரூபாய் வசூலிச்சு கிட்டத்தட்ட ‘கோச்சடையான்’ வசூலை டச் பண்ணிருக்கு.
இது முருகதாஸுக்கு மட்டுமல்ல.. அக்ஷய் குமாருக்கும் கிடைச்சுருக்க மிகப்பெரிய அங்கீகாரம். காரணம் இந்தப்படத்துக்காக தன்னோட உடல் எடையெல்லாம் குறைச்சு 12 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அந்த மாதிரி தன்னை மாத்தியிருந்தார் அக்ஷய். அதேசமயம் பாலிவுட்டை பொறுத்தவரை தற்போது சொல்லி அடிக்கும் கில்லியாக மாறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.