அதிரடி போலீஸ் அதிகாரி என்றால் தமிழுக்கு விஜயகாந்த், மலையாளத்திற்கு சுரேஷ்கோபி என்பது தெலுங்கில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் டாக்டர் ராஜசேகர்.. ‘இதுதாண்டா போலீஸ்’ என்கிற ஒரு சாம்பிள் போதும் அவரது கம்பீரத்திற்கு. நடிகை ஜீவிதா தான் இவரது வாழ்க்கை துணைவி..
தற்போது இவர்களது வாரிசான ஷிவானியும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். அப்பாவும் அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே நல்ல அறிமுகம் ஷிவானிக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சுப்பிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருபவர். மேலும். இசையிலும் ஆர்வம் உள்ள இவ்பர். கீபோர்டு, கிடார், வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பவராம்.