சமீபத்தில் வெளியான ராஜாராணி படத்தின் ட்ரெய்லர் ஹிட்டானதுக்கு இதில் எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இந்த வரவேற்பினால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்களாம். இந்த ட்ரெய்லர் இவ்வளவு வரவேற்பைப் பெற இன்னொரு முக்கிய காரணம், இதை செண்டிமெண்ட், காமெடி, எமோஷன் என கச்சிதமாக கோர்த்து எடிட் செய்த எடிட்டர் ஆண்டனி எல்.ரூபன் தான். இவர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் எடிட்டராக அறிமுகமானவர். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன.