ரஹ்மானின் இன்னொரு முகம் காட்ட வரும் ‘ரணம்’..!

சில குணச்சித்திர நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போது அந்தப்படத்திற்கே தனி மெருகு வந்துவிடும். அந்தவகையில் தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போன நடிகர் ரஹ்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தமிழ், மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது.

தற்போது அவர் நடிகர் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரணம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ரஹ்மான், தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பை போலீஸ் படத்தின் வெற்றிக்குப்பிறகு ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் இணைந்து நடித்துள்ளதாள் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில் “தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவது இந்த டீசர் அமைந்துள்ளது.

இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

Law of SurvivalRahmanRanamஇஷா தல்வார்தாமோதர்ப்ரித்விராஜ்ரணம்ரஹ்மான்