கடந்த 2௦13ல் ‘சிங்கம்-2’, இந்த வருடம் ’36 வயதினிலே’ என தமிழ்சினிமாவில் தனது இருப்பை தொடர்ந்து தக்கவைத்து வருபவர் நடிகர் ரகுமான். தற்போது அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் ஹீரோ என்று சொல்லத்தக்க வகையில் கிட்டத்தட்ட கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ரகுமான்.
இந்தப்படத்தில் பாதியில் நின்றுபோன ஒரு வழக்கை மீண்டும் தூசிதட்டி புலன் விசாரணையை மேற்கொள்பவராக பணியிலிருந்து விலகிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்துள்ளார். இந்த விசாரணையை மீண்டும் செய்யத் தூண்டும் இவரது உள்ளுணர்வு தான் படம் முழுவதும் இவரை வழிநடத்திச் செல்லுமாம். வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக இந்தப்படம் உருவாகி வருகிறது.