மஞ்சப்பை ராகவாவை மாஸ் இயக்குனர் ஆக்குமா ‘கடம்பன்..?

தங்களது முதல் படத்தை ஆவரேஜ் ஹிட்டாக கவனிக்க வைத்த பல இயக்குனர்கள் தங்களது இரண்டாவது படத்தில் விஸ்வரூபம் எடுத்து மாஸ் இயக்குனராக ஆனதற்கு பல உதாரணங்கள் நம் தமிழ் சினிமாவில் இருக்கின்றன.. ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, தாரணி, கௌதம் மேனன், லிங்குசாமி, பா.ரஞ்சித் எல்லாம் இந்த வகையை சேர்ந்தவர்கள் தான்.

அந்தவகையில் ‘மஞ்சப்பை’ படத்தின் மூலம் தாத்தா-பேரனுக்கு இடையேயான பாசத்தை முதன்முதலாக புதிய கோணத்தில் காட்டிய இயக்குனர் ராகவா, அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்யாவை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் ‘கடம்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டாலும், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக யானை இடம்பெற்றுள்ளதால் அது தொடர்பான கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனவாம். அந்தவகையில் ‘கடம்பன்’ படம் ராகவாவை மிக உயரத்திற்கு கொண்டுசெல்லும் என நம்பலாம்.

AryaKadambanRaghavaஆர்யாகடம்பன்ராகவன்