தாய்க்கு கட்டிய கோவிலை திறந்தார் லாரன்ஸ்..!

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் எதிலுமே வித்தியாசமானவர்.. அது தான் பெறாத குழந்தைகளின் மேல் பாசத்தை காட்டுவதாக இருந்தாலும் சரி.. தன்னைபெற்ற தாயின் மீது அன்பு செலுத்துவதாக இருந்தாலும் சரி.. அதுதான் இப்போது அவரது தாய்க்காக கோவில் கட்டும் அளவுக்கு அவரை உந்தித்தள்ளியிருக்கிறது.

கடந்த 2014ல் ஆரம்பித்த இந்தப்பணியை வெற்றிகரமாக முடித்த ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டிய கோவிலை அன்னையர் தினமான நேற்று காலை 8.15 மணியளவில் திறந்துவைத்தார். மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Lawrenceலாரன்ஸ்