இனி அன்னை தெரசா வழியில் செயல்படுவேன் ; லாரன்ஸ் உறுதிமொழி

சமீபத்தில் நடைபெற்ற அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இருவரும் அவருக்கு வழங்கினர்

விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ..இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து பஸ்ஸுக்கு காசு இல்லாததால் தன் தோளில் தூக்கிக் கொண்டே ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு என்னை கொண்டு வருவாங்க என் அம்மா. அன்றைக்கு நம்பிக்கையோடு எங்க அம்மா என்னை காப்பாத்தலேன்னா இன்னிக்கி நான் இல்லை அதனால இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன்…

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லை…டான்ஸரான போது நண்பர்களின் வேண்டுகோளுக்காக எப்போதாவது குடிப்பேன்…அதையும் நிறுத்தியாச்சி…ரொம்ப டென்சன் இருந்தா எப்போதாவது கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது இந்த அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மாற்றுத் திறணானிகளுக்கு நான் உதவியாக இருக்கிறேன் என்று சொல்வது தவறு.. அவர்கள் தான் எனக்கு உதவியாக இருந்து எனக்கு இந்த விருதை பெற்று தந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்…பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துட்டு போகப் போவதில்லை… சமீபத்தில் இறந்து போன ஜெயலலிதா அம்மாவாகட்டும் கலைஞர் அய்யாவாகட்டும் அவர்கள் சேர்த்து வைத்த பணம் எதையும் எடுத்துட்டு போகலே…அவர்கள் செய்த தான தர்மங்களைத் தான் எடுத்துட்டு போனாங்க… அதை மனசுல வெச்சி இனி அன்னை தெரசா வழியில் செயல் படுவது என முடிவெடுத்திருக்கிறேன்” ராகவா லாரன்ஸ் பேசினார்.

Raghav Lawrenct mother teresa awardஅன்னை தெரசாலாரன்ஸ்