ராகதேவனுக்கு ரசிகர் மன்றம் – ஏப்-5ல் மதுரையில் துவக்கம்


இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம்விரும்பிகள் இருக்கின்றனர். இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாகியுள்ளதுதான் ‘இளையராஜா ஃபேன்ஸ் கிளப்’.

இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது. சாதி, மதம், இனம், அரசியல் போன்றவற்றிற்கு அப்பாற்ப்பட்ட இந்த அமைப்பில் இசைஞானியின் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகளை, சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப்பூர்வமான செயல்படுவது என்று முடிவெடுத்து அதனை இந்த இந்த அமைப்பின் மூலம் செயலாக்க உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 5ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர். கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் 5ஆம் தேதியே “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது. இந்த அமைப்பில் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

16 VayathinilaeAnjaliAnnakiliDhoniGunaHey RamIllayarajaIsaignani IllayarajaMaaveeranMaestro IllayarajaThalapathiValliVikram
Comments (1)
Add Comment
  • ล้างเครื่องซักผ้า

    564291 382952You ought to get involved in a contest 1st of the greatest blogs more than the internet. Ill recommend this page! 720212