தற்போது நடிகர்சங்க பொறுப்புகளில் இல்லதததாலோ என்னவோ ராதாரவியை நிறைய படங்களில் பார்க்க முடிகிறது.. இந்த வருடத்தில் மட்டும் ‘அரண்மனை-2’, ‘இறுதிச்சுற்று’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘மாப்ள சிங்கம்’ என அவர் நடித்த நான்கு படங்கள் வெளியாகிவிட்டன..
அதுமட்டுமல்ல, இளைஞர்கள் வித்தியாசமான கதைக்களங்களுடன் தன்னை தேடி வருவதால் மறுக்காமல் அந்தப்படங்களை ஒப்புக்கொள்கிறார் ராதாரவி.. அந்தவகையில் அட்லி தயாரிப்பில் ஐ.கே.ஹரி என்பவர் இயக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ படத்தில் பேயாக நடிக்கிறார் ராதாராவி.. இந்தப்படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.