ஆர்கே – வடிவேலு இணையும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’..!


எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர்கே-வடிவேலு காம்பினேஷன் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.. சொல்லப்போனால். இன்று வரை தொலைக்காட்சிகளில் இந்தப்படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த கூட்டணி மீண்டும் “நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்துக்காக இணைகிறது. மக்கள் பாசறை வழங்கும் இந்தப்படத்தை ‘தண்ணில கண்டம்’ படத்தின் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார். இந்தப்படமும் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.

குறிப்பாக வடிவேலு படம் முழுக்க வருகிறார். அதேபோல ஹீரோவுக்கு இணையான ரோலில் நடிக்க கடந்த வருடங்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் ஒருவரை கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்துள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

Neeum Naanum Naduvula peyumR KVadiveluஅழகர் மலைஆர்.கேஎல்லாம் அவன் செயல்கேரளாசென்னைதண்ணில கண்டம்நீயும் நானும் நடுவுல பேயும்வடிவேலுஷாஜி கைலாஷ்