விஜயவாடாவின் லேண்ட்மார்க் ஆக உருவாகும் பிவிபி ஸ்கொயர்..!

சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பிவிபி நிறுவனம் தற்போது விஜயவாடாவில் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் ஷாப்பிங் மாலை உருவாக்கியுள்ளது. விஜயவாடாவின் 90 சதவீத வர்த்தகம் நடக்கும் எம்.ஜி.ரோட்டில்தான் இந்த பிவிபி ஸ்கொயரும் அமைந்துள்ளது.

இதில் 6 சினிமா தியேட்டர்கள், சூப்பர் மார்கெட், பேஷன் மெகாஸ்டோர், 560பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய புட்கோர்ட், இதுதவிர விதம் விதமான மாடர்ன் உணவகங்கள் மற்றும் ஒரே நேரத்தில் 375 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் மூன்றடுக்கு கார் பார்க்கிங் என் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது இந்த பிவிபி ஸ்கொயர்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றாக உருவாகியுள்ள இதை வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதிநட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திறந்துவைக்க உள்ளார்.

PVP Squareபிவிபி ஸ்கொயர்