தமிழில் 3டியில் வெளியாகும் ‘புலி முருகன்’ ; ஹைலைட்ஸ்..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’. இந்தப்படம் கேரளாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சில சாதனைகளை முறியடித்ததோடு, சில புதிய சாதனைகளை படைக்கவும் செய்தது. இந்தப்படத்தின் வெற்றியை இத்துடன் நிறுத்திவிடாமல் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்த படத்தின் தயாரிப்பாளர், இந்தப்படத்தை தமிழில், அதிலும் 3டி முறையில் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

‘புலி முருகன்’ படத்தை தமிழில் வெளியிடுவதற்கான பிளஸ் பாயிண்டுகள் என்னவென்று பார்க்கலாமா.?

தி கம்ப்ளீட் ஆக்டர் எனப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் படத்தின் ஹீரோ.. அவர் நம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.. நாயகி கமாலினி முகர்ஜி, இன்னொரு துணை நாயகி நமீதா, படத்தின் வில்லன்கள் ஜெகபதிபாபு, கிஷோர், அன்பு பாலா, வில்லனின் வலதுகையான ஹரீஷ் பெராடி, மோகன்லாலின் தாய்மாமனாக வரும் நடிகர் லால் உட்பட அனைவருமே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட முகங்கள் தான்.

மேலும் படத்தின் பிரதான கதாபாத்திரமாக வரும் புலி மற்றும் புலிக்கும் மனிதனுக்குமான சண்டை கிட்டத்தட்ட இந்தப்படம் ஒரு யுனிவர்சல் சப்ஜெக்ட்.. எந்த மொழியில் இந்தப்படத்தை எடுத்தாலும் வெளியிட்டாலும் இந்தப்படத்துடன் அந்தந்த மொழி ரசிகர்களால் எளிதில் ஒன்ற முடியும்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தை நன்றாக புரமோட் சேயும் பட்சத்தில் நேரடி தமிழ்ப்படங்களை போலவே மிகப்பெரிய வெறியை ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.

Mohan LalPuli Muruganபுலி முருகன்மோகன் லால்