விஷ்ணு, மியா நடிப்பில் புதுமுகம் ரவிகுமார் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் கதை டைம் மெஷின் சம்பந்தப்பட்டது என்பதை அதன் இயக்குனரும் தயாரிப்பளர்களும் ஏன் படத்தின் ட்ரெய்லரும் கூட உறுதிப்படுத்திவிட்டன. ஆனால் இப்போது விஜய் நடித்துவரும் ‘புலி’ படம் கூட டைம் மெஷின்’ சம்பந்தப்பட்ட கதைதான் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘புலி’ படத்தின் டீசரில் விஜய் வரலாற்று காலத்தில் இருப்பதாக காட்டப்பட்டாலும், அவரது தோற்றம் குறிப்பாக மீசை, கண்கள் எல்லாம் தற்போதையை விஜய்யை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் விஜய் இப்போதிருக்கும் உருவத்தோடு டைம் மெஷினில் பயணித்து முந்திய காலத்துக்கு செல்வதால் தான், அவரது உருவத்தில் மாற்றம் எதுவும் இல்லை என விஜய் தரப்பினரால் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இதுவும் டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமோ என்கிற ஆர்வம் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.