தயாரிப்பளார் சி.வி.குமாரை இயக்குனராக மாற்றியது யார்..?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சி.வி.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கிவரும் ‘மாயவன்’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்

தயாரிப்பாளராக இருந்த தன்னை இயக்குனராக மாறுவதற்கு தூண்டியவர் ‘சூது கவ்வும்’ பட இயக்குனரான நலன் குமாரசாமிதான் என்கிறார் சி.வி.குமார். “முதலில் இப்படத்தின் கதை உருவானதும் நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கித்தர சொன்னேன். கதையை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைக்கதையை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்” என தான் இயக்குனரான கதை சொல்கிறார் சி.வி.குமார்.

C V Kumarசி வி குமார்சூது கவ்வும்மாயவன்