திரையரங்குகளில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் விபிஎப் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக தயாரிப்பாளர் சங்கம், புதிய டிஜிட்டல் சர்வீஸ் புரவடைர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.. அந்தவகையில் வட இந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரை அரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இந்த நிறுவனம் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதன்மூலம் E cinema வுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரைஅரங்கங்களுக்கு நேரடியாக கன்டன்ட் (படம்) கொடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.