தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி மீண்டும் கோரிக்கை..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் லைட்மேன் பிரிவை சேர்ந்த சங்கத்தினர் தங்களது வெளியூர் பயணப்படியை குறைத்துக்கொள்ள மாட்டோம் என சமீபத்தில் ’பில்லா பாண்டி’, படத்தின் படப்பிடிப்பை தேவையில்லாமல் நிறுத்தினார்கள்.. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.

இருந்தாலும் பெப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்ந்து நடப்பதால் இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என இந்தப் பிரச்னை பற்றி பேசத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது.

கூட்டத்தின் முடிவில் ஊதிய பிரச்னையை காரணம் காட்டி படப்பிடிப்பை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை. ஊழியர்கள் மீது மரியாதை இருந்தாலும் அதற்காக எங்களது தயாரிப்பாளர்களை அவமானப்பட விடமாட்டோம். பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து நாளை முதல் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் விஷால்..

ஆனால் இதை பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு செய்துகொள்ளலாம் என சுமூகமாக பெப்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட ஆர்.கே.செல்வமணி நினைக்க, ஆனால் பெப்சியில் உறுப்பினராக உள்ள சங்கத்தில் இருந்து ஒருவர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகவும் பேசினார்..

இதை தொடர்ந்து பெப்சியிலிருந்து அவசர அவசரமாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.. அதில் “நாங்கள் எப்போதும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.. சில டெக்னீசியன்கள் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்று வரம்பு மீறும்போது கண்டித்து வைக்கவும் நாங்கள் தவறவில்லை. தற்போதுகூட சம்பந்தப்பட்ட நபரை மீடியா முன்பாக மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். இனி, மேற்கூறிய சர்ச்சைகள் நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FefsiProducer CouncilR K SelvamaniVishalதயாரிப்பாளர் சங்கம்பெப்சிவிஷால்