பின்னணி பாடகியாக மாறிய ஏ.எம்.ரத்னம் மருமகள்..!

இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர். தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார் ஐஸ்வர்யா.

அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல்வளத்தை பெரிதளவும் பாராட்டியுள்ளனர். இதுதவிர தமிழில் ‘கூட்டன்’ என்ற படத்திலும் பாடியுள்ளார் ஐஸ்வர்யா.

AM RathnamProducer Aishwaryaஏ.எம்.ரத்னம்யுவன் ஷங்கர் ராஜா