பிருத்விராஜின் புதிய படம் – ‘பாவாடை’


கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘1983’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பரபரப்பாக இதற்கு திரைக்கதை அமைத்தவர் பிபின் சந்திரன். இவர் அடுத்ததாக மார்த்தாண்டன் என்பவர் இயக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். படத்தின் பெயர் ‘பாவாடை’..

சிரிக்காதீர்கள்.. உண்மையில் அதுதான் பெயர்.. இதில் ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா..? நம்ம பிருத்விராஜ் தான். அவருடன் பிஜுமேனனும் சேர்ந்துகொண்டால் கலாட்டாவுக்கு கேட்கவா வேண்டும். குடிக்கு அடிமையான இரண்டு பேர்களை பற்றிய இந்தக் கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா நடிக்கிறார்.

இதற்குமுன் வெளியான ‘மெமோரீஸ்’ படத்திலும் பிருத்விராஜ் எந்நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Biju MenonMaarthandanMemoriesPaavadaiPipin ChandranPrithvirajShobana
Comments (330)
Add Comment