தற்போது மலையாளத்தில் மேஜர் ரவியின் டைரக்ஷனில் ‘பிக்கெட் 43’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். மேஜர் ரவியின் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக மைந்தன.
தற்போது பிருத்விராஜை வைத்து இயக்கம் இந்தப்படத்தையும் ராணுவ பின்னணியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேஜர் ரவி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் நடைபெற்று வருகிறது. இதில் பிருத்விராஜுடன் இந்தி நடிகரான ஜாவேத் ஜப்ரியும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்தப்படம் குறித்து ஒரு சில தகவல்களை வெளியிட்டிருந்தார் மேஜர் ரவி. அதில், “நடிகர்களை பற்றி பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். அதேபோல அவர்களை நாம் தவறாக மேற்கோள் காட்டவும் கூடாது. ஏதாவது ஒருவகையில் நம் வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தி விடும். பிருத்விராஜை வைத்து டைரக்ட் பண்ணுவது எனக்கு வசதியாக இருக்கிறது. நான் கேள்விப்பட்டதற்கு முற்றிலும் மாறாக வித்தியாசமானவராக இருக்கிறார் பிருத்விராஜ்” என குறிப்பிட்டுள்ளார் மேஜர் ரவி.