மலையாள ஹீரோக்களில் அதிகமான இளம் ரசிகைகளை கொண்ட பிருத்விராஜ், தன்னை துரத்தி துரத்தி காதலித்தவர்களை ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு, டிவி தொகுப்பாளரான சுப்ரியாவை காதலித்து 2011ல் கரம் பிடித்தார்.
இதோ இப்போது மூன்று வருட சந்தோஷ தாம்பத்யம் கழிந்த நிலையில் முதன்முறையாக ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாகி அந்த சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்.. எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த அவரது மனைவி நேற்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிருத்விராஜ் நடித்து வெளியான ‘சப்தமஸ்ரீ தஸ்கரா’ படம் கேரளாவில் மிகப்பெரிய வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து நேற்று முன் தினம் ஓணம் பண்டிகை கொண்டாடியவருக்கு ஓணம் பண்டிகை பரிசாக பெண் குழந்தை பிறந்து அவரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.