புட்பால் பிளேயராகிறார் பிருத்விராஜ்..!

 

சீனியர் நடிகர்களாகி விட்டாலே ஆக்சன், போலீஸ், டான் என ரூட் மாறிவிடுகிறார்கள் பல நடிகர்கள். ஆனால் நடிகர் பிருத்விராஜோ மேற்கூறிய ஏரியாக்களில் சுற்றினாலும், இப்போது சடாரென்று புட்பால் பிளேயராக மாறியிருக்கிறார். நிஜத்தில் இல்லை.. ‘தி பியூட்டிபுல் கேம்’ என்கிற படத்திற்காகத்தான்.

புட்பாலை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் பேஷன் போட்டோகிராபராக இருந்த ஜேம்ஸ் கோட்டக்கல் என்பவர் இயக்குனராக மாறியுள்ளார். அவருக்கு துணையாக அஜய்குமார் என்பவர் அறிமுக கதாசிரியராக களம் இறங்குகிறார்.

புட்பால் பற்றிய படம் என்பதால் இந்தியாவில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும் நிஜமான புட்பால் வீரர்களை வரவழைத்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல, இதுவரை கேரளாவில் புட்பாலின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் உதவியையும் நாடியிருக்கிரார்களாம். கதாநாயகி மற்றும் பிற நடிகர்களின் தேர்வும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறதாம்.

அஜய்குமார்ஜேம்ஸ் கோட்டக்கல்தி பியூட்டிபுல் கேம்பிருத்விராஜ்புட்பால்