“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” – பிரித்வியின் வருத்தம்..!

தனக்கு தோதான கதைகள் சரியாக அமையாததால் நான்கு வருடம் இடைவெளி விடவேண்டியதாக போய்விட்டது பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜனுக்கு. ஆனாலும் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜ் என குரு-சிஷ்யர்களின் புதல்வர்களை நடிக்க வைக்கிறோம் என ‘வாய்மை’ படத்தில் வாய்ப்பு தேடிவர சட்டென ஒத்துக்கொண்டார் பிரித்வி.

“இந்த படத்துல என்னோட கேரக்டர் பற்றி சொல்லனும்னா, படம் ஆரம்பிக்கும்போதே என்னோட கேரக்டர் வச்சுத்தான் ஆரம்பமாகும், படம் முடியும் வரை என்னோட கேரக்டரை மையப்படுத்தியே இருக்கும்,  அதுமட்டுமில்லாமல் இந்த படத்துல ஹைலைட்ன்னு பார்த்தா ரொம்ப நாள் கழிச்சு கவுண்டமணி சார் நடிச்சிருக்கார்” என்கிற பிரித்வி, படத்தை  ஒப்புக்கொள்ள இன்னொரு காரணம் கவுண்டமணியுடன் நடிக்க ஆசைப்பட்டுத்தானாம்.

ஆனால் பிரித்வியால் கவுண்டருடன் நடிக்க முடியவில்லை.. “படத்துல கவுண்டமணி சாருடன் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இல்ல, ஆனா ஒரு நாள் அவரை ஷூட்டிங் ஸ்பாட்ல மீட் பண்ற சான்ஸ் கிடைச்சுது. அப்போ அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் நடிச்சிட்டு எங்ககிட்ட வந்து சரியா நடிச்சேன்னா, கண்ணோட லுக் சரியா இருந்துச்சான்னு கேட்டாரு, இவ்ளோ பெரிய ஸ்டார் எங்ககிட்ட வந்து இப்படி கரெக்‌ஷன்ஸ் கேட்குறாரேன்னு எனக்கு ஆச்சர்யமா போச்சு. நான்தான் பெரிய ஆளுன்னு நினைக்கவே கூடாது, அவரை மாதிரிதான் இருக்கனும்னு ஆசைப்படுறேன்” என்கிறார் ப்ரித்விராஜன்.

Prithvi Rajanபிரித்வி