மீண்டும் ஒரு பிருத்விராஜ் படம் தமிழுக்கு ரீமேக் பார்சல்..!

நிச்சயமாக விடமாட்டார்கள்… நல்ல கதையம்சம்த்துடன் மலையாளத்தில் வெளியாகும் படங்களை பார்க்கும் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பளர்களுக்கும் உடனே அதை தமிழில் பண்ணினால் எப்படி இருக்கும் என மனது பரபரக்கும்.. இப்படித்தான் சமீபத்தில் அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’ படத்தை ரீமேக் பண்ணி இயக்கினார் ‘ஈரம்’ அறிவழகன்.. இது மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த ‘மெமொரீஸ்’ படத்தின் ரீமேக் தான்.

அதை தொடர்ந்து இப்போது அடுத்ததாக பிருத்விராஜின் மற்றொரு படமான ‘சப்தமஸ்ரீ தஸ்கரா’ படமும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது.. இதன் தமிழ் டப்பிங் மற்றும் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றியுள்ளார் போக்கிரி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தாவான ‘போக்கிரி’ பிரபாகர். எதற்கும் இருக்கட்டும் என கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் இந்த செய்தியை பேப்பர் அறிவிப்பாகவே வெளியிட்டுவிட்டார் பிரபாகர்.

Prithivrajஆறாது சினம்சப்தமஸ்ரீ தஸ்கராபோக்கிரிமெமொரீஸ்